உங்களுக்கு அழிவு நிச்சயம்! ரஷ்யாவுக்கு எதிராக சூளுரைத்த ஜெலென்ஸ்கி
அழிவுப்பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி காட்டமாக கூறியுள்ளார்.
கிளர்ச்சிக்கு அழைப்பு
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வாக்னர் தலைவர் பிரிகோஸின் பெரும் கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ஜனாதிபதி புடின் இந்த அறிவிப்பை கண்டித்து, இது காட்டிக்கொடுக்கும் செயல் என குறிப்பிட்டார்.
Sergei Ilnitsky/AP
ஒருபுறம் இவை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெலென்ஸ்கி கடும் விமர்சனம்
அதில், 'அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம். ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உக்ரைனில் எத்தனை நாட்கள் தனது படைகளை வைத்துள்ளதோ, அவ்வளவு பாரிய பிரச்சினை ரஷ்யாவிற்கு ஏற்படும்' என தெரிவித்துள்ளார்.
STRINGER/AFP
Everyone who chooses the path of evil destroys himself. Who sends columns of troops to destroy the lives of another country and cannot stop them from fleeing and betraying when life resists. Who terrorizes with missiles, and when they are shot down, humiliates himself to receive…
— Володимир Зеленський (@ZelenskyyUa) June 24, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |