ரிஷி சுனக்குடன் சந்திப்பு.. மூன்றாவது வெற்றி - ஜெலென்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை என்றும் ட்வீட் செய்துள்ளார்.
நேட்டோ மாநாட்டில் ஜெலென்ஸ்கி
லிதுவேனியாவின் Vilnius நகரின் நேட்டோ உச்சி மாநாட்டில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார். அப்போது பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்திக்க உள்ளதாக ட்வீட் செய்திருந்தார்.
அதில், ரிஷி சுனக்குடன் சந்திப்பு தொடங்க உள்ளதாகவும், நிறைய செய்திகள் வரும் என்றும் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து ரிஷி சுனக்கை சந்தித்து ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார்.
AP Photo/Mindaugas Kulbis
ரிஷி சுனக்குடன் பேச்சுவார்த்தை
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், 'இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் சந்திப்பு நடந்தது. உச்சி மாநாட்டில் உக்ரைனுக்கு இன்று மூன்றாவது சந்திப்பு மற்றும் மூன்றாவது வெற்றி.
உக்ரைனின் பாதுகாப்புத் தேவைகள், போர்க்களத்தில் உக்ரேனிய இராணுவத்தின் திறன்களை விரிவுபடுத்துவதற்கான கூடுதல் ஒத்துழைப்பு, குறிப்பாக நீண்ட தூர ஆயுதங்கள் மற்றும் எதிர்காலத்தில் நவீன மேற்கத்திய விமானப் போக்குவரத்து குறித்து நாங்கள் விவாதித்தோம்.
நேட்டோவில் உக்ரைன் இணைவதை ஆதரித்ததற்காகவும், கூட்டணியில் உறுப்பினராவதற்கு முந்தைய காலத்திற்கு, உக்ரைனுக்கு பயனுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதில் பங்கேற்றதற்காகவும், பிரதமர் மற்றும் பிரித்தானியாவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் லண்டனில் உக்ரைன் மீட்பு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும், குறிப்பாக உக்ரைனின் புனரமைப்புக்காக முடக்கப்பட்ட சொத்துக்களை ஒதுக்குவதன் மூலம், நமது நாட்டிற்கு நீண்டகால நிதியுதவியை வழங்க எடுக்கப்பட்ட முடிவுகளுக்காகவும், நான் குறிப்பாக பிரித்தானியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
Meeting with Prime Minister of the United Kingdom Rishi Sunak @RishiSunak. Third meeting and third success for Ukraine at the summit today.
— Володимир Зеленський (@ZelenskyyUa) July 12, 2023
We discussed Ukraine's defense needs, further cooperation to expand the capabilities of the Ukrainian army on the battlefield, in… pic.twitter.com/74ryG5TMYb
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |