ரிஷி சுனக் மீது குற்றசாட்டு; பிரித்தானிய சுற்றுச்சூழல் அமைச்சர் கோல்ட்ஸ்மித் ராஜினாமா
பிரித்தானிய சுற்றுச்சூழல் அமைச்சர் சாக் கோல்ட்ஸ்மித் (Zac Goldsmith) பதவி விலகியுள்ளார்.
சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜினாமா - ரிஷி சுனக்கிற்கு எதிராக விமர்சனம்
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கமான சுற்றுச்சூழல் அமைச்சர் சாக் கோல்ட்ஸ்மித் வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். தற்போதைய அரசாங்கம் காலநிலை பிரச்சினைகளில் அக்கறையற்றதாக இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக கடுமையாக விமர்சித்துவிட்டு ராஜினாமா செய்துள்ளார்.
பிரதமர் ரிஷி சுனக் சுற்றுச்சூழலில் ஆர்வமற்றவர் 'simply uninterested' என்று சாக் கோல்ட்ஸ்மித் கூறினார்.
REUTERS/PA
சுத்தமாக ஆர்வமில்லாதவர்
ரிஷி சுனக் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை வெறுக்கிறார் என்று கூறிய சாக் கோல்ட்ஸ்மித், அவருக்கு அதில் சுத்தமாக ஆர்வமில்லை 'simply uninterested' என கூறினார்.
கோல்ட்ஸ்மித், சுனக் மற்றும் ஜான்சன் ஆகியோர் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள். சாக் கோல்ட்ஸ்மித் காமன்வெல்த் வெளிநாட்டுப் பிரதேசங்களுக்கான மாநில அமைச்சராகவும் ஆற்றல், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் உள்ளார்.
Getty Images
"பிரதமர் ரிஷி சுனக் சுற்றுச்சூழலில் அக்கறை இல்லாததால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுகிறேன், மேலும் நாங்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலை இந்த அரசாங்கம் அலட்சியப்படுத்துவதால், எனது தற்போதைய பொறுப்பில் நான் தொடர முடியாது" என்று அவர் சமூக வலைதளத்தில் ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார்.
சுற்றுச்சூழல் அமைப்புகள் கவலை
ராஜினாமா செய்வதற்கான காரணம் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், கோல்ட்ஸ்மித்தின் கருத்துக்கள் சுற்றுச்சூழலுக்கான அரசாங்கத்தின் அணுகுமுறை பற்றிய வளர்ந்து வரும் கவலையை பிரதிபலிப்பதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் கூறியுள்ளன.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காலநிலை ஆலோசகர்கள் இந்த வாரம், நாடு அதன் "நிகர பூஜ்ஜிய" பசுமை இல்ல வாயு உமிழ்வு இலக்குகளை அடைவதில் பின்தங்கியுள்ளதாகவும், காலநிலை நடவடிக்கையில் தெளிவான உலகளாவிய தலைமைத்துவ நிலையை இழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
United Kingdom, PM Rishi Sunak, Zac Goldsmith, British environment minister, Boris Johnson
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |