புடினை கொல்வதற்கான அனைத்து உரிமை எங்களுக்கு உள்ளது: உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பேச்சு
ரஷ்ய ஜனாதிபதி புடினை கொல்வதற்கான அனைத்து உரிமைகளும் உக்ரைனுக்கு உள்ளது என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது ஆண்டில் காலெடுத்து வைக்க இருக்கும் நிலையில், போர் நிறுத்தத்திற்கான எத்தகைய நடவடிக்கைகளும் இதுவரை முன்னேற்றம் அடையவில்லை.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் இதுவரை 2,50,000 அதிகமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
உக்ரைன் உரிமை
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதியை கொல்வதற்கான அனைத்து உரிமைகளும் தங்களுக்கு இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தி சன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது, புடினை கொல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் அதை உக்ரைன் எடுத்துக் கொள்ளுமா? என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சுவாரஸ்யமான பதிலளித்தார்.
Ukraine has the right to kill Putin, President Zelenskyy said in an interview with The Sun
— NEXTA (@nexta_tv) November 21, 2023
This is how he responded to the journalist's question whether Ukraine will take the chance to kill Putin if such an opportunity presents itself:
"This is a war, and Ukraine has every… pic.twitter.com/6fM7awYg0c
அதில், இது போர் நடவடிக்கை, உக்ரைனின் நிலப்பரப்பை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் உக்ரைனுக்கு உள்ளது.
அதுபோல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொல்வதற்கான அனைத்து உரிமைகளும் உக்ரைனுக்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |