இதற்காக ஜேர்மனிக்கு நன்றி! ஜெலென்ஸ்கி உருக்கம்
உக்ரைனுக்கு ஆதரவு, உதவிய அனைத்து நாடுகளுக்கும் நன்றி என ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கியின் நன்றி
பாதுகாப்பு ஆயுதங்கள் வழங்கிய ஜேர்மனி, அவுஸ்திரேலியா, அமெரிக்கா என பல நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த வாரம் எங்கள் அரசு, எங்கள் மக்கள், எங்கள் இராணுவம் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதரவாக புதிய முடிவுகளை எடுத்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
எங்கள் இராணுவ வீரர்களுக்கான புதிய டாங்கிகள், பீரங்கி சுற்றுகள், உபகரணங்கள் வழங்கிய ஜேர்மனிக்கு நன்றி! உக்ரைனுக்கான உதவியை அதிகரிப்பதாக அறிவித்துள்ள கொரிய குடியரசுக்கு நன்றி!
ஆற்றல் மற்றும் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான துறையில் உதவிய அஜர்பைஜானுக்கு நன்றி!
எங்களை 2027 வரை உத்தியை பயன்படுத்தி மீண்டும் உருவாக்க உதவும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த சுவீடனுக்கு நன்றி!
உலக வங்கி மற்றும் உக்ரைன் இடையே ஜப்பானிய உத்தரவாதத்தின் கீழ் 1.5 பில்லியன் கடனுக்கான ஒப்புந்தம் கையெழுத்தானத்திற்கு ஜப்பானுக்கு நன்றி!
ஆக்கிரமிப்புடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்த அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, அமெரிக்காவுக்கு நன்றி! இப்போது எங்களுக்கு தேவையான பீரங்கி, வான்வழி இராணுவ ஆயுதம் ஆகியவற்றை வழங்கிய அமெரிக்காவுக்கு நன்றி!' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |