ரஷ்யர்களைத் துரத்தும் அளவுக்கு வலிமை இல்லை: முதன்முறையாக ஒப்புக்கொண்ட உக்ரைன் ஜனாதிபதி
படைபலம் கொண்ட ரஷ்யாவுக்கு இணையாக மல்லுக்கு நின்ற உக்ரைன் ஜனாதிபதியின் பேச்சில் பெரும் மாற்றம் தெரிகிறது.
ஆம், ரஷ்யர்களைத் துரத்தும் அளவுக்கு எங்கள் படைகளுக்கு வலிமை இல்லை என முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி!
உண்மை நிலையை ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி
ரஷ்யர்களைத் துரத்தும் அளவுக்கு எங்கள் படைகளுக்கு வலிமை இல்லை என முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
ஜெலன்ஸ்கியின் முடிவின் பின்னணியில் ட்ரம்ப் இருக்கலாம் என கருதப்படுகிறது.
தன்னால் ரஷ்ய உக்ரைன் போரை ஒரே நாளில் முடிவுக்குக் லொண்டுவர முடியும் என்று கூறியிருந்தார் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்.
ட்ரம்ப் என்ன முடிவெடுப்பார், எப்படி உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவார் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், போர் முடிவுக்கு வரும் நிலையில், உக்ரைன் தன் நாட்டின் சில பகுதிகளை இழக்கவேண்டி வரலாம் என்னும் கருத்துமட்டும் நிலவிவருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவுடன் தொடர்ந்து மோதிக்கொண்டிருந்த உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கியின் பேச்சில் பெரும் மாற்றம் தெரிகிறது.
உக்ரைனுடைய ராணுவ பலம் மற்றும் தற்போதைக்கு உக்ரைனுக்கு கிடைக்கும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவின் அளவைக் கொண்டு பார்க்கும்போது, ரஷ்யாவின் நிலைப்பாட்டை மாற்றும், மற்றும் ரஷ்யாவுடன் போரிடும் திறன் உக்ரைனுக்கு இல்லை என ஒப்புக்கொண்டுள்ளார் ஜெலன்ஸ்கி.
சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த ஜெலன்ஸ்கி, முதன்முறையாக ஒரு விடயத்தைக் கூறியுள்ளார்.
அது என்னவென்றால், இப்போதைக்கு உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைன் நாட்டின் பகுதிகளுக்கு நேட்டோ அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்தைப் பெறவேண்டும் என்றும், மீதமுள்ள பகுதிகளை, அதாவது, ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளை தூதரக பேச்சுவார்த்தைகள் மூலம் பெற காத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |