மன்னரை உக்ரைனில் பார்க்க விரும்புகிறோம்: உக்ரைன் ஜனாதிபதி
ஜெலன்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, பிரித்தானிய மன்னர் சார்லசை உக்ரைனுக்கு அழைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மன்னரை உக்ரைனுக்கு அழைக்க திட்டம்
தான் மன்னர் சார்லசுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தான் மன்னரை உக்ரைனுக்கு அழைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் நிலைமை எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும், அவரை உக்ரைனில் பார்க்க நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம் என்று கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.
இன்று காலை நான் என் மனைவியுடன் தொலைபேசியில் பேசினேன். எடுத்த உடனேயே, அவர் மன்னருக்கு வாழ்த்துதான் தெரிவித்தார். உண்மைதான், நாங்களும் உக்ரைன் மக்களும் மன்னரை நேசிக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து அவமதித்தபோது, உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவைக் காட்டுவதற்காக, மன்னர் சார்லஸ், ஜெலன்ஸ்கியை தனது நார்ஃபோல்க் எஸ்டேட்டுக்கு அழைத்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |