பெண்களுக்காக Knight+ Rani Edition எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த Zelo
இந்திய எலக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனமான Zelo Electric, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு Knight+ Rani Edition எனும் சிறப்பு பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாடல் 999 யூனிட்கள் மட்டுமே வெளியிடப்படுகிறது.
பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், பேபி பிங்க் நிறம் மற்றும் வெள்ளை பேனல்கள் கொண்ட அழகிய வடிவமைப்பில் வருகிறது.

இதன் விலை ரூ.69,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் 1.8kWh LFP (Lithium Iron Phosphate) பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எளிதில் அகற்றி தனியாக சார்ஜ் செய்யலாம்.
இந்த பேட்டரி 2.5 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும்.
இந்த ஸ்கூட்டரில் ஒரே சார்ஜில் 100 கிமீ (range) வரை பயணம் செய்யலாம். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 55 km ஆகும்.
சிறப்பு அம்சங்கள்
இதில் Hill Hold Control, Cruise Control, Follow-Me-Home ஹெட்லாம்ப், USB சார்ஜிங் போர்ட், Portable Battery Pack ஆகிய அம்சங்கள் இதில் உள்ளன.
பெண்களின் சுதந்திரமான பயணத்தை கொண்டாடும் வகையில் Rani Edition உருவாக்கப்பட்டுள்ளதாக Zelo Electric நிறுவனத்தின் இணை நிறுவனர் அதித்யா பெஹெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், ராணி என்ற சொல்லின் வலிமையும் தனித்துவமும் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Zelo Knight Plus Rani Edition, Women’s Day special edition scooter, Zelo Electric, Limited edition electric scooter #ZeloElectric #KnightPlusRani #ElectricScooter #WomensDay2026