புலம்பெயர்ந்தோரை இழிவாக பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளருக்கு பெருந்தொகை அபராதம்
இன வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த பிரெஞ்சு தீவிர வலதுசாரி ஜனாதிபதி வேட்பாளர் Eric Zemmour-க்கு 10,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் Reconquête வேட்பாளராக Eric Zemmour போட்டியிடுகிறார்.
இந்நிலைியல், 2020ல் CNews-க்கு அளித்த பேட்டியில், ஆதரவற்ற குழந்தைகளாக வரும் புலம்பெயர்ந்தோர், பிரான்ஸில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள்.
அவர்கள் கொலையாளிகள், திருடர்கள் மற்றும் கற்பழிப்பாளர்கள், அவர்களை நாட்டை விட்டு திருப்பி அனுப்ப வேண்டும் என Eric Zemmour கூறியிருந்தார்.
புலம்பெயர்ந்தோர் குறித்து Eric Zemmour கூறிய கருத்து இன வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாக நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திங்களன்று Eric Zemmour-க்கு 10,000 யூரோக்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள Eric Zemmour, 2022ல் தான் சொன்ன கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Zemmour கருத்துக்கள் தொடர்பாக மூத்த CNews பிரதிநிதி ஒருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.