கர்ப்பிணிகளை தாக்கும் ஜிகா வைரஸ் காய்ச்சல்.., எச்சரிக்கை விடுக்கும் இந்திய அரசு
ஏடிஸ் வகை கொசு மூலம் பரவும் ஜிகா வைரஸ் காய்ச்சல் காரணமாக மாநில அரசுகளுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜிகா வைரஸ் எச்சரிக்கை
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவலை கண்டறியப்பட்டதை தொடர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு இந்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக இந்த ஜிகா வைரஸ் காய்ச்சல் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரல் உள்ளதா என்று சோதிக்க வேண்டும் என்றும், அவ்வாறு இருந்தால் கருவின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏனெனில், கர்ப்பிணிகளை ஜிகா வைரஸ் தாக்கினால் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறக்க வாய்ப்புள்ளது என்றும், குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தலைவலி, தோல் வெடிப்பு, காய்ச்சல், மூட்டு வலி ஆகிய அறிகுறிகள் இந்த ஜிகா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் ஆகும்.
இந்நிலையில், ஜிகா வைரஸ் பாதிப்பு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |