ஜிம்பாப்வே அணியை சிதறடித்த சுப்மன் கில்...தொடரை கைப்பற்றியது இந்திய அணி...
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா.
130 ஓட்டங்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் சுப்மன் கில்
ஜிம்பாப்வே-க்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வே-க்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரேயில் நடைபெற்றது, இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
CHAMPIONS ??#TeamIndia pic.twitter.com/nVxqZ9A7v4
— BCCI (@BCCI) August 22, 2022
இதன் அடிப்படையில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் 40 ஓட்டங்கள் மற்றும் கே.எல் ராகுல் 30 ஓட்டங்கள் என குவித்து இந்திய அணிக்கு சீரான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
மேலும் இதனைத் தொடர்ந்த களமிறங்கிய சுப்மன் கில் ஜிம்பாப்வே அணியின் பந்துகளை மைதானத்தின் அனைத்து பக்கங்களுக்கும் சிதறடித்தார்.
For his stupendous knock of 130, @ShubmanGill is adjudged Player of the Match as India win by 13 runs.
— BCCI (@BCCI) August 22, 2022
Scorecard - https://t.co/ZwXNOvRwhA #ZIMvIND pic.twitter.com/V1UxwhS5qY
97 பந்துகளை எதிர்கொண்டு கில் 14 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தமாக 130 ஓட்டங்களை சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் கூடுதலாக 50 ஓட்டங்களை அணிக்காக சேர்க்கவே இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 289 ஓட்டங்கள் சேர்த்தது.
290 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் சீன் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் பெரிய ஓட்டங்களை குவிக்க தவறினர்.
Sikandar Raza has his third ODI hundred this month!
— Wisden (@WisdenCricket) August 22, 2022
Can he help Zimbabwe to a famous win over India?#ZIMvIND pic.twitter.com/W7FHpqXUU2
அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 45 ஓட்டங்களும், சிக்கந்தர் ராசா 115 ஓட்டங்களும் சேர்த்தனர்.
இருப்பினும் ஜிம்பாப்வே அணி 49.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 276 ஓட்டங்களை மட்டுமே சேர்த்ததால், இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் ஜிம்பாப்வே அணி தோல்வியை தழுவியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: மொத்தமாக 9 ஆயிரம் உக்ரைனிய வீரர்கள்...ரஷ்யாவின் அத்துமீறலால் பலியான உயிர்கள்!
மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த ஆட்டத்தின் நாயகன் மற்றும் தொடரின் நாயகன் பட்டத்தை சுப்மன் கில் தட்டிச் சென்றுள்ளார்.