தவிடுபொடியான ஆப்கானிஸ்தான்: முடித்த ஒற்றை வீரர்..அடித்து நொறுக்கும் ஜிம்பாப்வே
ஹராரே டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 87 ஓட்டங்கள் முன்னிலை பெற்று முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
சுருண்ட ஆப்கானிஸ்தான்
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தெரிவு செய்ய ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை ஆடியது.
பிராட் எவன்சின் மிரட்டலான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழந்தனர். குர்பாஸ் 37 (37) ஓட்டங்களும், அப்துல் மாலிக் 30 (40) ஓட்டங்களும் எடுக்க ஏனைய வீரர்கள் சொதப்பினர்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 127 ஓட்டங்களுக்கு சுருண்டது. பிராட் எவன்ஸ் (Brad Evans) 5 விக்கெட்டுகளும், முஸரபாணி 3 விக்கெட்டுகளும், தனகா சிவங்கா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஜிம்பாப்வே முன்னிலை
பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னெட் 6 ஓட்டங்களில் அவுட் ஆக, நிக் வெல்ச் 49 ஓட்டங்கள் எடுத்தார். பிரண்டன் டெய்லர் 43 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசினார்.
ஆனால் அணித்தலைவர் கிரேக் எர்வின் 5 ஓட்டங்களில் அவுட் ஆகி சொதப்பினார்.
உணவு இடைவேளை வரை ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் எடுத்துள்ளதுடன் 87 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
நங்கூரமாய் நின்று ஆடும் பென் கர்ரன் (Ben Curran) 79 (176) ஓட்டங்களும், சிக்கந்தர் ரஸா 37 (48) ஓட்டங்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |