இலங்கையை வீழ்த்தி வரலாற்று வெற்றி படைத்த ஜிம்பாப்வே
பாகிஸ்தானில், பாகிஸ்தான் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே பங்குபெறும் முத்தரப்பு T20 தொடர் நடைபெற்று வருகிறது.
ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி
நேற்றைய போட்டியில், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக பென்னட் 49 ஓட்டங்களும், அணித்தலைவர் சிக்கந்தர் ராசா 42 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
163 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து வெறும் 95 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக அணித்தலைவர் தசுன் ஷனகா 34 ஓட்டங்களும், பானுக ராஜபக்சே 11 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் ஜிம்பாப்வே அணி, 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஜிம்பாப்வே அணி, ஒரு முழு நேர ஐசிசி அணிக்கு எதிராக படைத்த பெரிய வெற்றி ஆகும்.
நாளைய போட்டியில், இலங்கை பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |