இலங்கையை சாய்த்த ஜிம்பாப்வே: 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த இலங்கை
இலங்கை-ஜிம்பாப்வே இடையிலான இரண்டாவது டி20 போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணியில் முன்னணி வீரர்களான பாத்தும் நிஸ்ஸங்க(Pathum Nissanka) 1 ஓட்டத்துடனும், குசல் மெண்டிஸ்(Kusal Mendis) 4 ஓட்டத்துடனும், குசல் பெரேரா(Kusal Perera) ஓட்டங்கள் எதுவும் குவிக்காமலும் பெவிலியன் திரும்பினார்கள்.
ஆனால் களத்திற்கு வந்த அசலங்கா(Asalanka) 39 பந்துகளில் 69 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
அவரை தொடர்ந்து மேத்யூஸ் 51 பந்துகளில் 66 ஓட்டங்கள் குவித்தார், இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்கள் குவித்தது.
ஜிம்பாப்வே வெற்றி
174 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் கிரேக் எர்வின்(Craig Ervine) 54 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இறுதியாக லூக் ஜாங்வே(Luke Jongwe) 12 பந்துகளில் 25 ஓட்டங்கள் குவித்து ஜிம்பாப்வே அணி வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
ஜிம்பாப்வே அணி இறுதியாக 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 178 ஓட்டங்கள் குவித்தது.
இதன் மூலம் இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |