போட்டி முடிந்ததும் ரசிகர்கள் செய்த செயல்! பலரது இதயங்களை வென்ற நெகிழ்ச்சி தருணம்
இந்தியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது.
இத்தொடரில் பங்கேற்க ஏற்கனவே 8 அணிகள் தெரிவாகியுள்ள நிலையில் மிஞ்சியுள்ள 2 அணிகள் தகுதிச்சுற்று மூலம் தெரிவு செய்யப்படவுள்ளது.
இதற்கான போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது.
குழு ஏ பிரிவில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.
குழு பி பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, அயர்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும், சமீபத்தில் ஜிம்பாப்வே- நேபாளம் அணிகள் மோதிய போட்டி நடந்து முடிந்தது.
இதில் ஜிம்பாப்வே 8 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை தோற்கடித்தது, ஜிம்பாப்வே வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினாலும் போட்டி முடிந்த பின்னர் அவர்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது, மைதானத்தில் இருந்த குப்பைகளை ஜிம்பாப்வே ரசிகர்கள் அகற்றினர், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
Nice gesture by Zimbabwe fans to clean the ground after the match got over against Nepal in World Cup Qualifiers. pic.twitter.com/2frn8V4WvY
— Johns. (@CricCrazyJohns) June 19, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |