2021 புத்தாண்டு பலன்கள் : கும்பம் ராசிக்காரர்களே! ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது

Astrology Benifits Aquarius Zodiac
By Balakumar Dec 31, 2020 11:51 PM GMT
Report
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 2021-ஆம் ஆண்டு புத்தாண்டு எப்படி அமையபப்போகின்றது என்பதை பார்ப்போம்.

உங்களுடைய ராசிக்கு சனி பகவான் 12-வது இடத்தில் அமர்ந்து இருப்பார். அது போல் குரு பகவான் ஏப்ரல் வரை உங்கள் ராசியிலும், அதன் பின்னர் பத்தாம் இடத்திற்கும் நகர்ந்து செல்கிறார்.

ராகு பகவான் நான்கிலும், கேது பகவான் பத்தாவது வீட்டிலும் அமர்ந்து இருப்பார்கள். மற்ற கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சியாகி கொண்டே இருக்கும்.

குடும்பம் - குடும்பத்தைப் பொறுத்தவரை தேவைகளுக்கு ஏற்ப பணத்தை தாராளமாக செலவு செய்வீர்கள். குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை திருப்தி படுத்துவீர்கள்.

சொந்த வீட்டில் இருப்பவர்கள் குடும்பத்தை பிரியும் நிலை ஏற்படலாம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான நேரமாக அமைய இருக்கிறது. உங்களுக்கு பிறகு பிறந்த உடன் பிறப்புகளிடம் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கணவன் மனைவிக்கு இடையே வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலம் பாதி பிரச்சினையை தீர்த்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதால் மன அமைதி பெறலாம்.

வியாபாரம் மற்றும் தொழில் - தொழில் மற்றும் வியாபாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுடன் பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். உங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் மற்றும் பங்குதாரர்கள் போன்றவர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.

சுய தொழிலில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல லாபம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

உத்தியோகம் - உத்தியோகத்தில் இருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயங்களில் ஏப்ரல், மே மாதங்களில் சாதகமான பலன்களை கொடுக்கும்.

புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதங்களில் மனதிற்குப் பிடித்த வேலை அமைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய திறமைக்கு இதுவரை கிடைக்காத அங்கீகாரம், இனி நிச்சயமாக கிடைக்கப் போகிறது.

உங்களிடம் இருக்கும் அறிவாற்றலை மற்றவர்கள் தெரிந்து கொண்டு பாராட்டுக்களை கொடுக்கப் போகிறார்கள். பதவி உயர்வு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் ஆண்டின் இறுதியில் அமையும்.

பொருளாதாரம் - பொருளாதாரத்தைப் பொறுத்தவரை திடீர் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் செலவுகளை கட்டுக்குள் கொண்டு வர நினைத்தாலும் உங்கள் கைக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு.

பொருளாதார ரீதியான சிக்கல்கள் ஆண்டின் தொடக்கத்தில் நிச்சயமாக இருக்கும்.

படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு உண்டு.

அதே சமயத்தில் வருமானம் குறையவும் சாத்தியக் கூறுகள் உண்டு. இவ்வாண்டு சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடுவது மிகவும் நல்லது. வருகின்ற விரயங்களை சுப விரயமாக மாற்றிக் கொண்டால் பிரச்சினைகள் இருக்காது.

பெண்களுக்கு - பெண்களைப் பொறுத்தவரை கணவன் மனைவி இடையேயான புரிதல் உண்டாகும். தன் கையே தனக்கு உதவி என்பது போல் உங்களுடைய தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கைவிடாமல் மென்மேலும் மெருகேறுவதற்கு வாய்ப்புகள் அமையும்.

சுயமாக தொழில் செய்யும் பெண்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக உள்ளது. வெற்றி மேல் வெற்றியைக் குவிப்பீர்கள்.

குடும்ப உறவுகளுக்கு இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதனை சிறப்பாக கையாண்டு சுமூகமான முடிவை கொடுப்பீர்கள்.

பரிகாரம்- கும்ப ராசிக்காரர்கள் உங்களுடைய ராசிக்கு இவ்வாண்டு மேலும் சிறப்பாக அமைய பசுவுக்கு தானம் செய்யலாம்.

சனிக்கிழமை தோறும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவு படைத்து வர நன்மைகள் நடைபெறும். வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி பூஜை செய்து வர அதிர்ஷ்டங்கள் வந்து சேரும்.

உங்களால் முடிந்த அளவிற்கு உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுங்கள் நல்லது நடக்கும்.

-Dhevigam -

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US