அமெரிக்க வரலாற்றில் குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்கும் முதல் மேயர்
நியூயார்க் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோஹ்ரான் மம்தானி, பதவியேற்பு விழாவில் குர்ஆனை பயன்படுத்தும் முதல் மேயராக வரலாற்றில் இடம்பிடிக்கிறார்.
இந்த நிகழ்வு அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்தில் முஸ்லிம் சமூகத்திற்கும் தெற்காசிய வம்சாவளியினருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
ஜனவரி 1, 2026 (வியாழக்கிழமை) அன்று நியூயார்க் நகரின் புதிய மேயராக ஜோஹ்ரான் மம்தானி பதவியேற்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்லாமியரும், மில்லேனியல் தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் மம்தானி, நகரின் பல்வேறு சமூகங்களுக்கு புதிய அடையாளமாக திகழ்கிறார்.

அவரது பதவியேற்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. நள்ளிரவு தனிப்பட்ட விழாவில், தனது தாத்தாவின் குர்ஆன் மற்றும் புகழ்பெற்ற கருப்பின எழுத்தாளர் ஆர்டுரோ ஸ்காம்பர்க் வைத்திருந்த குர்ஆனை பயன்படுத்துகிறார். பின்னர், மக்கள் பங்கேற்கும் பெரிய விழா நகர மன்றம் முன்பு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வு, நியூயார்க் நகரின் முதன்மையான முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையை மட்டுமல்லாமல், நகரின் நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடிமக்களுக்கு பெருமை சேர்க்கும் தருணமாகும்.
மம்தானியின் பதவியேற்பு, பல்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் நகரின் அடையாளத்தை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
ஜோஹ்ரான் மம்தானி உகாண்டாவில் பிறந்தவர். அவரது தந்தை பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் Bombay Province-ல் பிறந்தவர் மற்றும் அவரது தாய் ஒரிசாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |