தரமற்ற உணவை விநியோகித்த சொமோட்டோவும், உணவகமும் சேர்ந்து ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
தரமற்ற உணவை விநியோகம் செய்ததற்காக சொமோட்டோ நிறுவனமும், சம்பந்தப்பட்ட உணவகமும் இணைந்து வாடிக்கையாளருக்கு ரூ.30 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரூ.30 ஆயிரம் இழப்பீடு
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகபிரபு நாராயணசாமி. இவர் கடந்த ஜூலை 5-ம் திகதி அன்று வேளச்சேரியில் உள்ள அர்ஜுன் மம்மிடாடி என்ற ஆந்திரா மெஸ் உணவகத்தில் சொமோட்டோ மூலமாக அசைவ உணவு ஓர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

அண்டை நாட்டின் அச்சுறுத்தல்.., ரூ.44000 கோடி மதிப்பில் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தை தொடங்கும் இந்தியா
அதனை சாப்பிட்ட பிறகு ஜெகபிரபுவுக்கு தலைசுற்றல், நெஞ்சு வலி போன்ற உடல்நல பாதிப்பு ஏற்பட்டு 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் உணவுத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததன் படி சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த அந்த உணவகத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதையடுத்து, தரமற்ற உணவை விநியோகித்த சொமோட்டோவும், உணவகமும் சேர்ந்து ரூ.2.50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஜெகபிரபு வழக்கு தொடர்ந்தார்.
இதன்படி சம்பந்தப்பட்ட உணவகமும், சொமோட்டோ நிறுவனமும் இணைந்து மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |