போலி பனீர் விற்பனை செய்வதாக Zomato மீது குற்றச்சாட்டு: ‘Analogue paneer’ என்பது என்ன?
இந்தியாவில் Zomato நிறுவனம் போலி பனீர் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது தொடர்பாக சமூக ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள ஒரு செய்தி பெருமளவில் கவனம் ஈர்த்துவருகிறது.
போலி பனீர் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு
Zomato நிறுவனம், தனது Zomato Hyperpure என்னும் பிரிவின் மூலமாக உணவகங்களுக்கு ‘Analogue paneer’ என்னும் பனீரை விற்றுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Zomato இணையதளத்தில் அது Analogue paneer என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும், டிக்கா மற்றும் பனீர் உணவு வகைகள் செய்ய சிறந்தது என அது விற்பனை செய்யப்படுவதால் உணவு பாதுகாப்பு தொடர்பில் கவலை உருவாகியுள்ளது.
Sumit Behal என்பவர் சமூக ஊடகமான எக்ஸில் இது தொடர்பான செய்தி ஒன்றைப் பதிவேற்றம் செய்ததைத் தொடர்ந்து இந்த விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
India loves paneer dishes and restaurants sell fake paneer made with vegetable oils without any disclaimer
— Sumit Behal (@sumitkbehal) October 20, 2024
They made you believe that you are eating healthy food by eating varieties of paneer dishes over junk food
This is being sold on website of Zomato for restaurants pic.twitter.com/GJh3dspiy3
Zomato இணையதளத்தில் இந்த பனீர் Analogue paneer என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது உண்மைதான் என்றாலும், அதை வாங்கி உணவு தயாரிக்கும் உணவகங்கள், தங்கள் உணவு மெனுவில், இந்த உணவு Analogue paneerஆல் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பிடுவதில்லை.
Analogue paneer என்பது என்ன?
பனீர் என்பது பாலிலிருந்து தயாரிக்கப்படும் உணவு தயாரிப்பு ஆகும். பாலை எலுமிச்சைச்சாறு அல்லது வினிகர் சேர்த்து திரியச் செய்து அதிலிருந்து பனீர் தயாரிக்கப்படும்.
ஆனால், இந்த Analogue paneer அல்லது போலி பனீர் அல்லது செயற்கை பனீர் என்பது, விலை மலிவான தாவர எண்ணெய்கள், ஸ்டார்ச் போன்ற விடயங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
எதனால் உணவகங்கள் இந்த போலி பனீரை வாங்குகின்றன?
உண்மையான பனீரின் விலை கிலோ ஒன்றிற்கு சுமார் 450 ரூபாய் என்றால், இந்த போலி பனீரின் விலை கிலோ ஒன்றிற்கு 210 ரூபாய் மட்டுமே.
ஆக, போலி பனீர் மூலம் தயாரிக்கப்பட்டது என்ற உண்மையை வெளியிடாமல் உணவகங்கள் இந்த போலி பனீரை பயன்படுத்தி உணவு வகைகளை தயாரிக்கும்போது, உணவகங்களுக்கு அதனால் பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.
மாமிசம் உண்ணாதவர்கள் பலர், தங்கள் புரதத் தேவைகளுக்காக இன்று பனீரை சாப்பிடுகிறார்கள்.
அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு உண்மையான பனீருக்கு பதிலாக இந்த போலி பனீரை கொடுத்தால், அது அவர்களுடைய ஊட்டச் சத்து தேவைகளை சரியான வகையில் சந்திக்குமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேல், இந்த போலி பனீர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெய்களில் trans fats என்னும் கொழுப்புகள் இருக்கக்கூடும்.
அவை, இதய நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதுடன், இதய நோய், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் inflammation என்னும் பிரச்சினைக்கான அபாயத்தையும் அதிகரிக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |