உலகின் 2வது பாரிய பணக்காரர் ஆனார் மார்க் ஜூக்கர்பெர்க்.! முதலிடத்தில் யார்?
உலக பணக்காரர்கள் பட்டியலில் மெட்டா (Meta) தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) இரண்டாவது இடத்தை எட்டியுள்ளார்.
இரண்டாவது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நான்கு நாட்களுக்கு முந்தைய நிலவரப்படி, உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜுக்கர்பெர்க் 200 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்த்தில் இருந்தார்.
அதேபோல், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) 265 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட Bloomberg Billionaires Index-ன் படி, மெட்டா பிளாட்ஃபார்ம்ஸின் பங்குகள் வியாழக்கிழமை கடுமையாக உயர்ந்ததால் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்தது.
ஜுக்கர்பெர்க் இப்போது 206.2 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.
அவர் எலான் மஸ்க்கை விட 50 பில்லியன் டொலர் பின்தங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mark Zuckerberg, Bloomberg Billionaires Index, Elon Musk, Jeff Bezos