சுவிஸ் மாகாணமொன்றின் மக்களுக்கு தொற்று நோய் ஒன்று தொடர்பில் ஒரு எச்சரிக்கை
சுவிஸ் மாகாணம் ஒன்றிற்கு தொற்று நோய் ஒன்று தொடர்பில் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய் ஒன்று தொடர்பில் எச்சரிக்கை
சூரிச் மாகாண மக்களுக்கு, மணல்வாரி அல்லது மண்ணன் என அழைக்கபப்டும் measles என்னும் அம்மை நோய் அதிகரித்துவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம் இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினர் மத்தியில் தடுப்பூசி பெருவதில் உள்ள வித்தியாசமே என்கிறார் சூரிச் மாகாண மருத்துவரான Franziska Kluschke.
மருத்துவர்கள், தங்கள் நோயாளிகள் முறையாக தடுப்பூசி பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சூரிச் மாகாணத்தில் மட்டும் இதுவரை எட்டு பேருக்கு மண்ணன் நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பிற பகுதிகளிலும் தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இந்த மண்ணன் தொற்று பொதுவாக எந்த பின்விளைவுகளும் இன்றி தானாகவே குணமாகிவிடும்.
ஆனால், சிலருக்கு அது மூளைக்காய்ச்சல், நிமோனியா, காது தொற்று போன்ற பிரச்சினைகளையும், அபூர்வமாக மரணத்தையும் ஏற்படுத்திவிடக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |