காபி தயாரிக்கும் இயந்திரத்தில் எக்கச்சக்கமான கிருமிகள்: சுவிஸ் ஆய்வகம் கண்டுபிடிப்பு
தானியங்கி காபி தயாரிக்கும் இயந்திரங்கள் இன்று உலகெங்கும் பிரபலமாக விளங்குகின்றன.
ஆனால், அவற்றின் சுத்தமும் சுகாதாரமும் சரியாக கவனிக்கப்படுகிறதா என்பதுதான் கேள்வி!
காபி தயாரிக்கும் இயந்திரத்தில்...
சூரிக் மாகாண ஆய்வகம் ஒன்று, இந்த காபி தயாரிக்கும் இயந்திரங்களில் தயாரிக்கப்படும் பால் கலந்த பானங்களை ஆய்வுக்குட்படுத்தியது.
அப்போது, நான்கில் ஒரு பானத்தில் கிருமிகள் இருப்பது தெரியவந்ததுடன், சில காபி மாதிரிகளில், மனித மற்றும் விலங்குகளின் குடலுக்குள் காணப்படும் பல கிருமிகள் எக்கச்சக்கமான அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விடயம் என்னவென்றால், அவற்றில் சில கிருமிகள் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் ஆகும்.
ஆக, பதப்படுத்தப்பட்ட பால் பயன்படுத்தப்படும் இந்த இயந்திரங்களில் இத்தகைய மோசமான கிருமிகள் வந்தது எப்படி என இயந்திரங்களை இயக்குபவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், அதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |