சுவிஸ் பூங்காவில் பிறந்த ஆசிய யானைக் குட்டி, Z என்ற எழுத்தில் பெயர் விரைவில் அறிவிப்பு
சுவிஸ் வனவிலங்கு பூங்காவில் ஆசிய யானைக் குட்டியொன்று பிறந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிக் பூங்காவில் உள்ள 19 வயதான ஆசிய பெண் யானை, கடந்த சனிக்கிழமை காலை ஒரு ஆண் யானைக் குட்டியை ஈன்றதை கண்காணிப்பு கேமரா பதிவு செய்தது.
இந்த யானைக் குட்டியின் பெயர் “Z” என்ற எழுத்தில் தொடங்கும் என பூங்கா அறிவித்துள்ளது.
'Kaeng Krachan' யானை பூங்காவில் தற்போது 6 யானைகள் உள்ளன. அதில் நான்கு பெண் யானைகள் உள்ளன. ஒரு ஆண் யானை மற்றும் இப்போது பிறந்துள்ள குட்டி யானை.
அதில் ஒரு பெண் யானையான Farha-விற்கும், Thai எனும் ஆண் யானைக்கும் தான் இந்த புதிய குட்டி பிறந்துள்ளது.
பூங்காவின் இயக்குனர் செவெரின் டிரசன், “பிறந்த குழந்தையின் முதல் சில வாரங்கள் மிகவும் முக்கியமானவை. தற்போது குட்டி ஆரோக்கியமாகவும் சக்திவாய்ந்ததாகவும் உள்ளது.” என தெரிவித்தார்.
ஆசிய யானைகள் (Elephas maximus) தற்போது ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட இனமாகும். உலகம் முழுவதும் சுமார் 50,000 யானைகள் மட்டுமே உள்ளன.
இவ்விலங்குகளை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய அபாயத்தில் உள்ள உயிரினங்களுக்கான இனப்பெருக்க திட்டத்தின் கீழ், சூரிக் பூங்கா இந்த இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு வருகிறது.
புதிய யானைக்குட்டிக்கு பெயர் பூங்கா ஊழியர்களின் ஆலோசனைக்குப் பிறகு புதன்கிழமை அறிவிக்கப்படும்.
2025-ஆம் ஆண்டிற்கான பெயரிடும் மரபில், "Z" எழுத்தில் தொடங்கும் பெயர்களே தேர்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Zurich Zoo baby elephant Asian elephant calf birth 2025 Zurich Zoo elephant news Baby elephant name starting with Z Elephas maximus conservation Zurich elephant park news Endangered species birth zoo Zoo birth 2025 Kaeng Krachan Elephant Park Asian elephant baby Switzerland