புதிய போப்பை தேர்வு செய்யும் கூட்டத்தில் 4 இந்திய கார்டினல்கள்
வத்திக்கானில் புதிய போப்பை தேர்வு தேர்வு செய்யும் கார்டினல் கூட்டத்தில் 4 இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
வத்திக்கான் ஏப்ரல் 21, 2025 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கர்த்தரின் தூதுவராக விளங்கிய போப் பிரான்சிஸ் இறந்துவிட்டார்.
இதனையடுத்து, Novendiale எனப்படும் ஒன்பது நாள் மறு பூஜைச் சடங்கு துவங்கியுள்ளது.
இந்தக் காலகட்டம் “sede vacante” என அழைக்கப்படுகிறது, இது புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் வரை நீடிக்கும்.
புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் முக்கிய அம்சமான கார்டினல் கூட்டம் (Conclave) வத்திக்கானில் உள்ள Sistine Chapel-ல் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் 252 கார்டினல்களில் 138 பேர் மட்டுமே வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்குப்பங்களிக்க முடியாது.
இதில் இந்தியாவிலிருந்து 6 கார்டினல்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் இந்த கூட்டத்தில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் ஆவர்:
- கார்டினல் பாசிலியோஸ் க்லீமிஸ் (Baselios Cleemis) – கேரளாவின் திருவனந்தபுரம் சிரோ-மலங்கரா பேராயர். 2012ல் கார்டினலாக நியமிக்கப்பட்டார்.
- கார்டினல் ஃபிலிப் நெரி பெர்ராவ் (Filipe Neri Ferrao) – கோவா மற்றும் டாமன் பேராயர். 2022ல் போப் பிரான்சிஸ் அவரால் கார்டினலாக நியமிக்கப்பட்டார்.
- கார்டினல் ஜார்ஜ் கூவகாட் (George Koovakad) – 2024ல் கார்டினலாக நியமிக்கப்பட்டார். வத்திக்கானில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.
- கார்டினல் ஆண்டனி பூலா (Anthony Poola) – ஹைதராபாத் பேராயர் மற்றும் இந்தியாவின் முதல் தளித் கார்டினல்.
கார்டினல் ஜார்ஜ் அலென்செரி (George Alencherry) – 1945 ஆம் ஆண்டில் கேரளாவில் பிறந்த கார்டு ஆலஞ்சேரி சீரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையின் மேஜர் ஆர்ச்பிஷப் எமரிட்டஸ் ஆவார். தற்போது 80 வயதுக்கு அருகில் உள்ளார். ஏப்ரல் 2025-க்குப் பிறகு வாக்களிக்க முடியாது.
கார்டினல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் (Oswald Gracias) – இவர் 1944-இல் மும்பையின் மாஹிமில் பிறந்தார். இவர், 2013-இல் கார்டினல் வாக்காளர்களில் ஒருவராக இருந்தார். தற்போது 80 வயதுக்கு மேற்பட்டவர், இனி வாக்காளர்களில் இருக்க மாட்டார்.
இந்தியக் கார்டினல்களின் பங்கு, உலகளவில் கத்தோலிக்க மக்களின் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. புதிய போப்பாக யார் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதை உலகம் ஆவலுடன் எதிர்நோக்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |