ஈரானை காக்க 1.4 கோடி மக்களும் உயிர் தியாகம் செய்ய தயார்: ஜனாதிபதி மசூத் கருத்து
ஈரானை பாதுகாக்க ஒன்றரை கோடி மக்கள் உயிர் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியை செவ்வாய்க்கிழமைக்குள் (இன்று இரவு 8 மணிக்குள்) திறக்காவிட்டால் ஒட்டுமொத்த ஈரானையும் அழித்து விடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ஒட்டுமொத்த ஈரான் நாகரிகமும் இன்று இரவுடன் அழியப் போகிறது. இந்த நாகரிகம் மீண்டு ஏழவே ஏழாது. இதை நான் ஒருபோதும் விரும்பவில்லை, ஆனால் பெரும்பாலும் இது இன்று நடக்கக் கூடும் என டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், 47 ஆண்டுகளாக நீடித்து வரும் அச்சுறுத்தல், ஊழல் மற்றும் மரணங்கள் ஒருவழியாக இன்று முடிவுக்கு வரும் என குறிப்பிட்டுள்ள டிரம்ப், ஈரான் மக்களுக்கு இறைவன் ஆசி வழங்கட்டும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் தியாகம் செய்ய தயார்
இந்த நிலையில், ஈரான் நாட்டை பாதுகாக்க 1 கோடி 40 லட்சத்துக்கும் மேற்கொள்ள ஈரான் நாட்டவர்கள் உயிர் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 1.4 கோடிக்கும் அதிகமான மக்கள் ஈரானை காப்பாற்ற தியாகம் செய்ய தயாராக இருப்பதாக பதிவு செய்துள்ளார்.
அதில், ஈரானுக்காக நானும் உயிர் தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |