ஈரான் இன்று இரவுடன் அழியப்போகிறது: டிரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டல்
ஈரானின் ஒட்டுமொத்த நாகரிகம் அழியப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்க படைகளுக்கு இடையிலான போர் நடவடிக்கைகள் காரணமாக ஈரான் முக்கிய பொருளாதார கடல்வழி தளமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது.
அதே நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் 10 நாட்களுக்குள் திறக்க வேண்டும் என்று டிரம்ப் காலக்கெடு விதித்து இருந்தார். மேலும் இதனை செய்யாவிட்டால் ஒட்டுமொத்த ஈரானையும் அழித்து விடுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

டிரம்ப் விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது.
டிரம்பின் புதிய பதிவு
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ஒட்டுமொத்த ஈரான் நாகரிகமும் இன்று இரவுடன் அழியப் போகிறது. இந்த நாகரிகம் மீண்டு ஏழவே ஏழாது. இதை நான் ஒருபோதும் விரும்பவில்லை, ஆனால் பெரும்பாலும் இது இன்று நடக்கக் கூடும் என டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
BREAKING: Trump says a 'whole civilization will die tonight, never to be brought back again. I don’t want that to happen, but it probably will'. pic.twitter.com/cHTWP0dic1
— The Spectator Index (@spectatorindex) April 7, 2026
இருந்தாலும் தற்போது ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது மேலும் குறைவான பயங்கரவாத போக்கு கொண்ட தன்மை மேலோங்கியுள்ளது. ஒருவேளை புரட்சி எதுவும் ஏற்படலாம், யாருக்கு தெரியும். உலகின் சிக்கலான மற்றும் நீண்ட வரலாறு கொண்ட முக்கியமான தருணம் இன்று இரவு தெரிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், 47 ஆண்டுகளாக நீடித்து வரும் அச்சுறுத்தல், ஊழல் மற்றும் மரணங்கள் ஒருவழியாக இன்று முடிவுக்கு வரும் என குறிப்பிட்டுள்ள டிரம்ப், ஈரான் மக்களுக்கு இறைவன் ஆசி வழங்கட்டும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த பதிவு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |