சிறையிலிருந்து தப்பித்த 1,800 கைதிகள்! பிரபல நாட்டில் பயங்கரம்!
நைஜீரியா நாட்டில் சிறியிலுருந்து 1,800-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான Lagos-லிருந்து தென்கிழக்கே 400 கி.மீ தொலைவில் உள்ளது Owerri.
அப்பகுதியில் உள்ள பெரிய சிறைச்சாலை மீது திங்கட்கிழமை அதிகாலை ஒரு ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழு திடீர் தாக்குதல் நடத்தியது.
அவர்களிடம் ரொக்கெட் லான்சர்கள், கையெறி குண்டுகள், இயந்திர துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் சிறிய ரக துப்பாக்கிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் சிறைச்சாலையின் நிர்வாகத் தொகுதியை வெடிபொருட்களைப் பயன்படுத்தி பலமாக தாக்கியுள்ளனர், பின்னர் தடுப்பு சுவர்களை வெடித்து சிதறடிக்கச்செய்து சுமார் 1,844 கைதிகளை தப்பிக்கவிட்டுள்ளார்.
அவர்கள் பெரும்பாலான கைதிகளை திட்டமிட்டபடி லொறிகள் மற்றும் பேருந்துகளைக் கொண்டு ஏற்றிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு அந்நாட்டில் தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத குழுவான Indigenous People of Biafra மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், இந்த குழு தற்போது தாக்குதலில் ஈடுபடவில்லை என மறுத்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் தாக்குதல்களுக்கு எந்தக் குழுக்களும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு நைஜீரியாவில் ஜனவரி முதல் பல காவல் நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன, ஜனவரி முதல் ஏராளமான வெடிமருந்துகள் திருடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



