உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவில் உயிர் பலி! உறுதிப்படுத்திய கவர்னர்
ரஷ்யா மீது உக்ரைன் நடத்தி தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக கவர்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, கடந்த சில தினங்களா போரில் பின்னடைவை சந்தித்துள்ளது.
ரஷ்யா கைப்பற்றிய கார்கிவ் நகரை உக்ரைன் படையினர் மீட்டுள்ளனர். எனினும், உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யா தொடர்ந்து அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இதனிடையே, உக்ரைன் படைகள் எல்லைக்கு அருகே உள்ள ரஷ்யா கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் Tyotkino கிராமத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் ரோமன் ஸ்டாரோவோயிட் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரோமன் ஸ்டாரோவோயிட் டெலிகிராமில் பதிவிட்டதாவது, Tyotkino மீது எதிரிகள் நடத்திய தாக்குதலில் துரதிஷ்டவசமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது.
கனடாவில் மங்கி பாக்ஸ் பரவல்.. 10க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு!
உள்ளூர்வாசி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். முதற்கட்ட தகவலின் படி, கொல்லப்பட்டவர் மதுபான ஆலைக்கு மூலப்பொருட்களைக் கொண்டு வந்த டிரக் ஓட்டுநர் என தெரியவந்துள்ளது.
அந்த ஆலை மீது எதிரிகள் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சிலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது என குர்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் ரோமன் ஸ்டாரோவோயிட் தெரிவித்துள்ளார்.