நாடொன்றில் பாதி மக்கள் தொகைக்கு உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்: ஐ.நா எச்சரிக்கை
போர் சூழல் காரணமாக லெபனானில் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள் ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் உணவு பஞ்சம்
இஸ்ரேல் - லெபனான் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதன் விளைவாக அந்நாட்டு மக்கள் தொகையில் பாதி அளவு அதாவது கிட்டத்தட்ட 12.4 லட்சம் மக்கள் மோசமான உணவு பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
லெபனான் விவசாய அமைச்சகம், உலக உணவு திட்டம் மற்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், தீவிரமான போர் நடவடிக்கைகள், இதனால் ஏற்படும் மக்களின் இடம்பெயர்வு மற்றும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக லெபனானில் உணவு பாதுகாப்பின்மைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதங்களில் லெபனானின் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனானில் உணவு பாதுகாப்பு இடைவெளி எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றும், மேலும் பொதுமக்கள் தங்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் உயிரிழப்புகள்
லெபனானில் கடந்த மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட 2,521 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 7,800 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |