அடுத்தடுத்து மாரடைப்பில் உயிரிழந்த 10 இளைஞர்கள்: நவராத்திரி கொண்டாட்டத்தில் சோகம்
நவராத்திரி விழாவின் போது வீதிகளில் நடனமாடிக்கொண்டிருந்து 10 இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்து மாரடைப்பு
இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் தொடர்ந்து 24 மணித்தியாலம் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த 10 பேரும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலில் 13 வயது சிறுவன் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதையடுத்து 24 வயதுடைய ஒருவரும் மயங்கி விழுந்துள்ளார்.
பின் அடுத்தடுத்து 8 பேர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நவராத்திரி தொடங்கிய நாட்களில் இருந்து நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் மாலை 6 மணியிலிருந்து அதிகாலை 2 மணிவரையில் 108 ஆம்புலன்சுக்கு 521 அழைப்புகள் வந்துள்ளன. ஆகவே அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்று குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இந்தியாவில் இதுவரை மாரடைப்பால் இளைஞர்களும், சிறுவர்களும் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், ஒரே நாளில் இத்தனை இளைஞர்கள் உயிரிழந்திருப்பது இந்தியாவையே உலுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |