உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்படும் 100 இந்தியர்கள்! ஊதியம் எவ்வளவு தெரியுமா?
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா மோதல்
உக்ரைன் மற்றும் ரஷ்யா மோதல் இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த சண்டையில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாஸ்கோ இன்னும் அதிகமான போராளிகளுக்கான உலகளாவிய தேடலில் உள்ளது. இதற்காக சில சமயங்களில் முறைசாரா இடைத்தரகர்கள் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாஸ்கோவில் உள்ள இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தில் பணிபுரியும் இந்திய மொழிபெயர்ப்பாளர் ஒருவர், கடந்த வாரம் இந்தியர்கள் 10 பேர் தங்கள் மையத்திற்கு வந்ததாக ஊடகத்திடம் கூறினார்.
ஒவ்வொரு பாரிய நகரிலும் உள்ள ஆட்சேர்ப்பு மையங்களில் வெளிநாட்டினர் செயலாக்கப்படுவதாக கூறிய அவர், 70 முதல் 100 இந்திய குடிமக்கள் சேர்க்கப்படுவதை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டதாக தெரிவித்தார்.
1,200 டொலர்கள் ஊதியம்
இவ்வாறாக ரஷ்ய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இந்தியர்களில் ஆப்பிள் விவசாயி, விமான சேவை வழங்குபவர் மற்றும் பட்டதாரி ஒருவரும் அடங்குவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சில இந்தியர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு போர் அல்லாத பணிகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு அவர்கள் Kalashnikov துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி பெற்றதாகவும், ஆட்சேர்ப்பு மையம் சில ஊடகத்திடம் கூறியதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 5 இந்தியர்களுக்கு, இராணுவ உதவியாளர்களாக பணியாற்ற மாதம் சுமார் 1,200 டொலர்கள் ஊதியமாக வழங்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |