ஸ்காட்லாந்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட ரயில்கள்: உயிருக்கு போராடும் பயணிகள்
ஸ்காட்லாந்தில் இரண்டு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ரயில் விபத்து
ஸ்காட்லாந்தின் ஹைலேண்ட்ஸில் உள்ள அவிமோர் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் மோதிக் கொண்ட இரண்டு ரயில்களில் ஒன்று, 100 ஆண்டுகள் பழமையான ஸ்காட்ஸ்மேன் ரயில் என்பதுடன் 100 மைல் வேகத்தில் பயணம் செய்த முதல் நீராவி ரயிலும் ஆகும்.
இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ரயில் விபத்து தொடர்பாக ஸ்காட்லாந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ரயில் விபத்து காரணமாக அவிமோர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |