43 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வந்த 104 வயது முதியவர் விடுதலை
ஆயுள் தண்டனை பெற்றுவந்த 104 வயது முதியவர் 43 ஆண்டுகள் கழித்து விடுதலை அடைந்துள்ளார்.
104 வயது முதியவர் விடுதலை
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், கவுசாம்பி மாவட்டம் கவுராயே கிராமத்தைச் சேர்ந்தவர் லகான். கடந்த 1921-ம் ஆண்டு பிறந்த இவர் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் காரணம் காட்டி கடந்த 1977-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்கள் வீரமற்றவர்கள்.., பாஜக எம்.பி கூறிய கருத்தால் சர்ச்சை
இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் பிரபு சரோஜ் என்பவர் கொலை செய்யப்பட்டதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 1982-ம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால், 104 வயது வரை சிறை தண்டனை அனுபவித்து வந்த லகானை விடுவித்து கடந்த 2-ம் திகதி லகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் அவர் கடந்த 20-ம் திகதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மகள் வீட்டுக்கு சென்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |