பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்கள் வீரமற்றவர்கள்.., பாஜக எம்.பி கூறிய கருத்தால் சர்ச்சை
பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்கள் வீரமற்றவர்கள் என்ற பாஜக எம்.பி. ராம் சந்தர் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக எம்.பி சர்ச்சை
ஹரியானாவின் பிவானி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநிலங்களவை எம்.பி ராம் சந்தர் ஜங்ரா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசுகையில், "பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்கு போராடுகின்ற குணம் இல்லை. அக்னிவீரர்கள் போன்ற பயிற்சியை சுற்றுலா பயணிகள் பெற்றிருந்தால் 3 தீவிரவாதிகளால் 26 பேரை சுட்டுக் கொன்றிருக்க முடியாது.
அவ்வாறு தீவிரவாதிகளுடன் போராடியிருந்தால் உயிரிழப்பு எண்னிக்கை குறைந்திருக்கும். ராணி அகில்யாபாய் ஹோல்கர், ராணி லட்சுமிபாய் ஆகிய பெண்கள் போராடவில்லையா?
நம்முடைய சகோதரிகள் போராட வேண்டும்" என்றார். இவர் பேசிய கருத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |