குழந்தைகளை நாடு கடத்திய ரஷ்ய வீரர்கள் : நாடு திரும்பிய 11 உக்ரைனிய குழந்தைகள்
ரஷ்ய வீரர்களால் சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்ட 11 உக்ரைனிய குழந்தைகள் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பி இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்பட்ட உக்ரைனிய குழந்தைகள்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கி 18 மாதங்களை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த 18 மாத கால போர் நடவடிக்கையில் கிழக்கு உக்ரைனின் சில முக்கிய நகரங்களை ரஷ்ய வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மட்டும் இல்லாமல் அதை ரஷ்யாவின் ஒற்றை அங்கமாகவும் அறிவித்தனர்.
AFP/GETTY
அத்துடன் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து உக்ரைனிய குழந்தைகளை ரஷ்ய வீரர்கள் சட்டவிரோதமாக நாடு கடத்துவதாகவும் உக்ரைன் குற்றச்சாட்டு முன்வைத்தது.
மேலும் உக்ரைனிய குழந்தைகளை ரஷ்யாவிற்கு நாடு கடத்துவதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
வீடு திரும்பிய உக்ரைனிய குழந்தைகள்
இந்நிலையில் ரஷ்ய வீரர்களால் சட்டவிரோதமாக ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்ட 11 உக்ரைனிய குழந்தைகள் மீண்டும் தாய் நாடான உக்ரைனுக்கு திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
twitter
இந்த தகவலை உக்ரைன் ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்ட குழந்தைகளை ரஷ்யர்கள் தற்காலிகமாக கைப்பற்றி வைத்திருந்த கெர்சன் பகுதியில் வைத்து இருந்ததாக தெரியவந்துள்ளது.
தற்போது தற்போது தாய் நாட்டிற்கு திரும்பியுள்ள 11 உக்ரைனிய குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு 2 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |