சர்வதேச ஒருநாள் போட்டியில் 11 ஓவர்கள் பந்துவீசிய நியூசிலாந்து வீராங்கனை: ஆச்சரியத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டி தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் விராங்கனை 11 ஓவர்கள் பந்துவீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதல்
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதல் பேட்டிங்களில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 329 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து 330 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 48.4 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதன் மூலம் இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது, முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
11 Overs in an ODI Innings. ?
— Female Cricket (@imfemalecricket) July 1, 2023
Eden Carson finished with a spell of 2/41 in 11 overs.#CricketTwitter pic.twitter.com/bv0i8O8PMo
11 ஓவர்கள் பந்துவீசிய நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்
இந்நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஈடன் கார்சன் 11 ஓவர்கள் பந்துவீசி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
பொதுவாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர் ஒருவர் அதிகபட்சமாக 10 ஓவர்கள் மட்டுமே பந்து வீச முடியும், அதே போல டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர் ஒருவரால் 4 ஓவர்கள் மட்டுமே அதிகபட்சமாக பந்து வீச முடியும்.
அப்படி இருக்கையில், நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஈடன் கார்சன் இந்த போட்டியில் 7,9, 17, 19, 21, 23, 31, 33, 43, 45 போன்ற ஓவர்களை வீசி தன்னுடைய 10 ஓவர்களை நிறைவு செய்து இருந்தார்.
11 overs for a bowler in a 50-over match? ?
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 1, 2023
New Zealand's Eden Carson did that due to an oversight in the second #SLvNZ ODI!
Since the last 55-overs-a-side match in ODIs in 1995, there have been five instances (across men's and women's games) where a bowler has bowled beyond… pic.twitter.com/capOHd8Zfv
இருப்பினும் 47வது ஓவரையும் ஈடன் கார்சன் வீசியுள்ளார், இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 11 ஓவர்கள் பந்துவீசி வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும் இந்த போட்டியில் அவர் 2 விக்கெட்டுகளையும் பறித்துள்ளார். ஈடன் கார்சன் 11 ஓவர்கள் பந்து வீசியதற்கு நடுவர்களின் தவறான கணக்கிடுதல் காரணம் என தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |