பொலிஸ் கான்வாய் மீது பாய்ந்த ராக்கெட் குண்டுகள்: 11 பொலிஸாரின் உயிரை பறித்தது யார்?
பாகிஸ்தானில் பொலிஸ் கான்வாய் மீது நடந்த தாக்குதலில் 11 அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸ் கான்வாய் மீது தாக்குதல்
கிழக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பொலிஸ் கான்வாய் மீது ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் கையெறி குண்டுகளை வீசக்கூடிய தாக்குதல்தாரிகள் மறைந்து இருந்து தாக்கியதில் 11 பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் தாக்குதல்தாரிகளின் இந்த தாக்குதலில் 7 பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரஹீம் யார் கான் மாவட்டத்தில் உள்ள Kacha நகரில் வியாழக்கிழமை நடந்த இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
தாக்கியது கொள்ளையர்களா?
பாலைவனப் பகுதியில் செயல்பட்டு வரும் கொள்ளையர்களை தேடி பொலிஸார் தேடல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
பொலிஸார் வழங்கிய தகவலில், தாக்குதல்தாரிகள் பெரும்பாலும் கொள்ளையர்களாக இருக்கலாம் என்றும், ஆயுதம் தாங்கிய குழுவினராக இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களில் ஒன்று பழுதாகி நின்றதை தொடர்ந்து தாக்குதல்தாரிகள் ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டு வாகனங்களை தாக்கியதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |