படகில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல திட்டமிட்ட 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது
இலங்கையில் இருந்து 11 பேர் படகு மூலம் தமிழகத்திற்கு மிக நெருக்கமாக உள்ள கேரள பகுதிக்கு முதலில் வந்து சேர்ந்துள்ளனர்.
அவர்கள் அங்கிருந்து கடல் மார்க்கமாக நேரடியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்த 11 இலங்கையர்கள் தங்கும் விடுதியில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவிற்கு வந்த அவர்கள் கேரளாவில் தங்கியிருப்பதாக, தமிழக கியூ பிராஞ்ச் பொலிஸாருக்கு முதலில் தகவல் கிடைத்தது.
Representative
தமிழ்நாட்டிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்லத்திற்கு அமைதியாகச் சென்ற குழுவினர் தங்கள் பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் கேரளாவில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் கியூ பிராஞ்ச் பொலிஸார் கேரள பொலிஸாருடன் தொடர்பு கொண்டு அவர்கள் அனைவரையும் கைது செய்த நிலையில், இப்போது இரு தரப்பு அதிகாரிகளும் அவர்களிடம் கூட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மேலதிக நடவடிக்கைக்காக 11 பேரையும் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற முயற்சி காவல்துறையால் முறியடிக்கப்படுவது இது முதல் முறையல்ல, கொஞ்ச காலத்திற்கு முன்பு, கொச்சியில் இதேபோன்ற முயற்சி நடந்தது மற்றும் டவுன் அண்டர் வரை படகில் பயணிக்க முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.