தேர்வில் தோல்வியால் மரணத்தை தேடிக்கொண்ட 11ஆம் வகுப்பு மாணவர்
தமிழக மாவட்டம் திண்டுக்கல்லில் 17 பள்ளி மாணவர் ஒருவர், 11ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்றதால் உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.
11ஆம் வகுப்பு தேர்வு
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநரான சூரிய நாராயணனின் மகன் யோகபாபு (17). இவர் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருந்தார்.
நேற்றைய தினம் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் யோகபாபு 600க்கு 273 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.
ஆனால், வணிகவியல் பாடத்தில் அவர் தோல்வியுற்றார். இதன் காரணமாக விரக்தியடைந்த யோகபாபு மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
விபரீத முடிவு
இந்த நிலையில் அவர், நேற்று மாலை மதுரை மார்க்கமாக சென்ற ரயிலின் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மாணவரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |