டாவோஸ் உரையில்... ட்ரம்ப் குறிப்பிட்ட 12 மிகப்பெரிய அதிர்ச்சித் தகவல்கள்
டாவோஸில் உலகத் தலைவர்கள் மத்தியில் ஆற்றிய அதிர வைக்கும் உரையின் போது, டொனால்ட் ட்ரம்ப் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை பதிவு செய்துள்ளார்.
பழிவாங்கும் நடவடிக்கை
கிரீன்லாந்து விவகாரத்தில் இராணுவ நடவடிக்கை இல்லை என்பதை உறுதி செய்த அமெரிக்க ஜனாதிபதி, ஆனால், அந்தத் தீவு நாடு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், பொருளாதாரப் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அவர்களை மறைமுகமாக அச்சுறுத்தியுள்ளார்.
தனது வழக்கமான தன்னம்பிக்கை நிறைந்த துணிச்சலுடன், அவர் அங்கு கூடியிருந்த உலகத் தலைவர்கள் மத்தியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றியுள்ளார்.
அதில், அமெரிக்க ஜனாதிபதிகள் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக கிரீன்லாந்தை வாங்க முயற்சி செய்து வருகின்றனர் என்று தான் முன்பு கூறியிருந்த கூற்றை ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
சீனா மற்றும் ரஷ்யாவால் கிரீன்லாந்துக்கு அச்சுறுத்தல் என்றார். ஆனால், அந்த இரு நாடுகளும் ஒரு அச்சுறுத்தல் என்பது பீதியைத் தூண்டிவிடுவதற்கான ஒரு கட்டுக்கதை என்று ரஷ்யா பதிலளித்துள்ளது.
இரண்டாவதாக, உலகப் பாதுகாப்புக்காகவே கிரீன்லாந்தை அமெரிக்கா சொந்தமாக முயன்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். கிரீன்லாந்தின் பாதுகாப்பிற்கு 200 மில்லியன் டொலர் செலவிடுவதாக டென்மார்க் உறுதி அளித்திருந்தாலும் அதில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே செலவிட்டுள்ளது என்றார்.

மூன்றாவதாக கிரீன்லாந்து விவகாரத்திற்கு முன்பு வரையில் ஐரோப்பியத் தலைவர்கள் அவரை மிகவும் நேசித்தார்கள் என்றும் அவர்கள் என்னை அப்பா என்று அழைத்தார்கள் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் தற்போது
4வதாக, 175 பில்லியன் டொலர் மதிப்பிலான Golden Dome பாதுகாப்புத் திட்டத்திற்கு கிரீன்லாந்தை வாங்கும் தனது திட்டம் மிகவும் முக்கியமானது என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
5வதாக, இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனிக்கும் ஜப்பானுக்கும் எதிராக நேச நாடுகளுக்காக அமெரிக்கா போரில் வெற்றி பெற்றிருக்கவில்லை என்றால் ஐரோப்பாவில் தற்போது அனைவரும் ஜேர்மனி மற்றும் ஜப்பானிய மொழி பேசியிருப்பார்கள் என்றார்.

6வதாக, ஐரோப்பா தற்போது சரியான திசையில் செல்லவில்லை என குறிப்பிட்ட ட்ரம்ப் கண்டத்தின் சில பகுதிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறியுள்ளதாக தெரிவித்தார்.
7வதாக, கிரீன்லாந்தை நீங்கள் ஒப்படைக்க மறுத்துள்ளீர்கள், இதை அமெரிக்கா எப்போதும் நினைவில் கொள்ளும் என ஐரோப்பியத் தலைவர்களுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். வலுவான மற்றும் பாதுகாப்பான அமெரிக்கா என்பது ஒரு வலுவான நேட்டோவைக் குறிக்கிறது என்றார்.

அவரை எனக்குப் பிடிக்கும்
8வதாக, டென்மார்க்கை நன்றியற்ற நாடு என்று குறிப்பிட்ட ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவதால் நேட்டோ கூட்டமைப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றார்.
9வதாக, கிரீன்லாந்திற்கு அமெரிக்க இராணுவத்தை அனுப்பி, அந்த நாட்டின் மீது படையெடுக்கும் திட்டத்தை ட்ரம்ப் நிராகரித்தார். 10வதாக, ட்ரம்ப்பின் கிரீன்லாந்து வியூகம் நேட்டோ கூட்டணியைக் கவிழ்த்துவிடும் என்று நேட்டோ தலைவர்கள் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் கிரீன்லாந்தைப் பாதுகாக்கும் நிலையில் இல்லை என ட்ரம்ப் பதிவு செய்தார்.

11வதாக, ட்ரம்பின் Board of Peace-ல் சேர விடுக்கப்பட்ட அழைப்பை பிரான்ஸ் ஜனாதிபதி நிராகரித்துள்ளதையும், கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இமானுவல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளதையும் மறைமுகமாக சுட்டிக்காட்டிய ட்ரம்ப், உண்மையில் அவரை எனக்குப் பிடிக்கும் என்றார்.
12வதாக, நிக்கோலஸ் மதுரோவை ஆட்சியில் இருந்து நீக்கியதை குறிப்பிட்ட ட்ரம்ப், வெனிசுலா அதிகாரிகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்து வருவதாகவும், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் பொருளாதாரத்திற்கு நல்ல காலம் வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |