இலங்கை முதியோர் இல்லத்தில் தீ விபத்து - 12 பேர் உயிரிழப்பு
இலங்கை முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை முதியோர் இல்லத்தில் தீ விபத்து
ஹொரனை - படகொட பகுதியில் உள்ள செனஹாசே கெடெல்லா மௌபியா செவனா முதியோர் இல்லத்தில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட போது, அந்த முதியோர் இல்லத்தில் 72 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயைக்கட்டுப்படுத்தி 51 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
முதியோர் இல்லத்தின் தண்ணீர் மோட்டாரிலும், அங்கிருந்த Multi-plug ஒன்றிலும் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்குக் காரணம் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |