சீனாவில் சட்டத்தை மீறி 13 குழந்தைகளை பெற்ற நபர்: அரசு தண்டனையை மீறி செய்த செயல்
13 Children, Man in China Violating Child Policy: சீனாவில் விதிகளை மீறி 13 குழந்தைகளை பெற்ற நபர் மீது அந்நாட்டு அரசு பல தண்டனைகளை விதித்துள்ளது.
13 குழந்தைகளுக்கு தந்தை
சீனாவின் குவாங்சி மாகாணத்தின் கின்சோ என்ற கிராமத்தை சேர்ந்த 49 வயது ஹூவாங் என்ற நபர் தன்னுடைய 27வது வயதில் 20 வயது பெண்ணை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
சீனாவில் 1970ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்து 2015ம் ஆண்டு வரை ஒரு குழந்தை கொள்கை திட்டம் நடைமுறையில் இருந்தது. 2021ம் ஆண்டில் ஒரு தம்பதி 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அரசு அனுமதி வழங்கி இருந்தது.

இந்த நிலையில் ஹூவாங் தம்பதிக்கு முதலில் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. பின்னர் அடுத்தடுத்து 8 ஆண் குழந்தைகளுக்கு ஹூவாங் தந்தையாகி அக்கம் பக்கத்தினருக்கு அதிர்ச்சியளித்தார்.
குழந்தை பிறப்பு தொடர்பான சட்டத்தை சீனா அரசு தீவிரமாக பின்பற்றும் நிலையில், சீனாவின் கருத்தடை கொள்கையை மீறியதற்காக ஹூவாங்கிற்கு சீன அரசாங்க அதிகாரிகள் பல தண்டனைகளை வழங்கியுள்ளனர்.
இருந்தும், அவர் தன்னுடைய கொள்கையில் இருந்து பின்வாங்காமல் 3 பெண் குழந்தைகளை பெற்று கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஹூவாங் குறித்து தெரிவித்த கருத்தில், தனக்கு பல குழந்தைகள் இருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தைகள் தன்னை அப்பா என்று அழைப்பது மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்துள்ளார்.