வளிமண்டல கீழடுக்கு சுழற்சி..13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மொத்தம் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறியதாவது...
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (நவ2) தமிழகம், புதுச்சேரி ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். நவ 3 முதல் நவ 5 வரை தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |