ஜேர்மனியில் வறுமையில் வாழும் 13 மில்லியன் மக்கள்
ஜேர்மனியில், 2025ஆம் ஆண்டு நிலவரப்படி 13 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்வதாக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
வறுமையில் வாழும் 13 மில்லியன் மக்கள்
ஜேர்மனியை மையமாகக் கொண்ட The Parity Welfare Association என்னும் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி, ஜேர்மனியில் 13.34 மில்லியன் மக்கள், அதாவது, 16.1 சதவிகிதம் பேர் வறுமையில் வாழ்வதாக, ஜேர்மன் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்துள்ளது.

2020க்குப் பிறகு வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது 2025இல்தான்.
முந்தைய ஆண்டில் 15.5 சதவிகிதம் பேர் வறுமையில் வாழ்வதாக, ஜேர்மன் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், The Parity Welfare Association அமைப்பின் நிர்வாக இயக்குநரான Joachim Rock, அரசு மக்களுக்கு வழங்கி வரும் உதவிகளை நிறுத்தவேண்டாம் என கோரியுள்ளதுடன், அப்படி அரசு வழங்கும் உதவிகள் நிறுத்தப்பட்டால், நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரையறையின்படி, ஒருவரின் குடும்ப வருமானம் தேசிய சராசரி வருமானத்தில் 60 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால், அவர் வறுமையின் அபாயத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறார்.
2025ஆம் ஆண்டில், தனியாக வசிக்கும் ஒரு நபருக்கான வருமான வரம்பு, மாதத்திற்கு 1,445 யூரோக்கள் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |