13 வயது சிறுவனை கட்டாயத் திருமணம் செய்த ஆசிரியை! ஆறு நாட்களில் விதவைக் கோலம்.. தெரிய வந்த அதிர்ச்சி உண்மை
டியூசன் சொல்லித் தருவதாக கூறி சிறுவனை திருமணம் செய்த ஆசிரியை
திருமண தோஷம் நீங்க வேண்டும் என்பதற்காக 13 வயது சிறுவனை மணம் முடித்து உடலுறவு கொண்ட ஆசிரியை
இந்திய மாநிலம் பஞ்சாபில் ஆசிரியை ஒருவர் 13 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து உறவு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த ஆசிரியை மங்லிக். இவர் பஸ்தி பவா கேல் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு இலவசமாக டியூசன் சொல்லித் தருவதாக கூறியுள்ளார்.
அதனை நம்பிய சிறுவனின் பெற்றோர் ஆசிரியையுடன் தங்கள் மகனை அனுப்பி வைத்துள்ளனர். தனது வீட்டிற்கு சிறுவனை அழைத்துச் சென்ற மங்லிக், அவரைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார்.
அத்துடன் திருமண சடங்குகளை முடித்த அவர், சிறுவனுடன் உடலுறவு வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பின்னர் விதவை உடை அணிந்த மங்லிக், அவரே தனது கை வளையல்களை உடைத்துக் கொண்டு, தாலியை அகற்றியுள்ளார்.
மேலும் தனது கணவர் இறந்துவிட்டார் என அவர் உறவினர்கள் அனைவர்க்கும் தெரிவித்து, இரங்கல் கூட்டம் நடத்தியுள்ளார். அதன் பின்னர் குறித்த சிறுவனை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு தன் பெற்றோரிடம் நடந்தவற்றை எல்லாம் சிறுவன் கூற அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக காவல்நிலையம் சென்ற சிறுவனின் பெற்றோர் ஆசிரியை மீது புகார் அளித்துள்ளனர்.
தனது திருமண தடைபட்டு வந்ததால் இதுபோல் சிறுவனை திருமணம் செய்தால் தோஷம் நீங்கும் என நினைத்து ஆசிரியை மங்லிக் இவ்வாறு செய்துள்ளார் என்பது பின்னர் தெரிய வந்தது.