அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல்
அமெரிக்ககாவின் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு
இரு நாட்களுக்கு முன்னர் ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானின் 80க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
நேட்டோ மாநாட்டிற்காக துருக்கி சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்தம் தன்னைப் பொறுத்தவரை முடிந்துவிட்டது என தெரிவித்துள்ள நிலையில், ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

இதில், ஈரானின் தெற்குக் கடற்கரையோரம் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோரக் கண்காணிப்பு உபகரணங்கள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான சேமிப்புத் தளங்கள், கடற்படை சொத்துக்கள் மற்றும் தளவாட வசதிகள் ஆகியவற்றை குறிவைத்து இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டதாக அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானின் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய துறைமுக நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய 2 நாள் தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 78 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குவைத், கத்தார், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல்
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ட்ரோன் களை ஏவி தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

குவைத்தில் உள்ள பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பு, கத்தாரில் முன் எச்சரிக்கை தளமாகப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள் ஆண்டெனா மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, குவைத், மற்றும் பஹ்ரைனில் எச்சரிக்கை சைரன்களை ஒலிக்கப்பட்டுள்ளது.
توضح القيادة العامة أنه بإرادةٍ صلبة وجاهزيةٍ قتالية عالية، تصدت منظومات الدفاع الجوي بقوة دفاع البحرين واعترضت ودمرت عدداً من الاعتداءات الجوية الإيرانية الغادرة صباح اليوم الخميس 9 يوليو 2026م.https://t.co/MRVBJ4Rkil pic.twitter.com/EBORzChX4C
— قوة دفاع البحرين (@BDF_Bahrain) July 9, 2026
ஈரானின் வான்வழித் தாக்குதல்களைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்ததுள்ளது.
"அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்தால் பிராந்தியத்தில் உள்ள மற்ற அமெரிக்கத் தளங்களுக்கும் கடுமையான பதிலடிகள் நீட்டிக்கப்படும்" என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |