உலகின் வெப்ப அபாய பட்டியலில் 14 இந்திய நகரங்கள்.., அதில் உள்ள 2 தமிழக நகரங்கள் எது?
வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் குறித்த புதிய ஆய்வு ஒன்றை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்தியது.
இதில் உலகின் மிக மோசமான வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் 50 நகரங்களில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் இந்த ஆண்டு வெப்ப அலை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
அந்தவகையில் இந்த ஆய்வில், உலக அளவில் வெப்ப அபாயம் அதிகம் உள்ள முதல் 10 நகரங்களில் அகமதாபாத், நாக்பூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

இதில் இரண்டாம் இடத்தில் உள்ள நாக்பூரில் கடந்த 12 நாட்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சென்னை, மும்பை, கொல்கத்தா, போபால், பாட்னா, ஜெய்ப்பூர், பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ, கான்பூர் மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களும் இந்த பட்டியலில் உள்ளன .
நகரங்களில் மரங்களின் எண்ணிக்கை குறைதல், குளிர்விக்கும் வசதிகளின் பற்றாக்குறை போன்ற காரணிகளும் வெப்பத்தின் தாக்கத்தை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |