ஒன்லைனில் வினோத சவால்! பட்டாம்பூச்சியை வைத்து விபரீத செயல்..14 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
பிரேசிலில் 14 வயது சிறுவன் ஒன்லைனில் வினோத சவாலை செய்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஊசி மூலம்
பிரேசிலின் Planaltoவை சேர்ந்த 14 வயது சிறுவன் டேவி நுன்ஸ் மொரெய்ரா. இவர் தனக்கு விளையாட்டின்போது காயம் ஏற்பட்டதாக தந்தையிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது விபரீத செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதாவது, டேவி இறந்த பட்டாம்பூச்சியை தண்ணீரில் கலந்து, பின்னர் அந்த திரவத்தை ஊசி மூலம் தனது காலில் செலுத்தியதாக மருத்துவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சிறுவன் உயிரிழப்பு
இதன் காரணமாக டேவி Septic shockக்கில் சிக்கியதால் அவரது உடல் செயலிழந்திருக்கிறது. இதனையடுத்து டேவி உயிரிழந்திருக்கிறார்.
பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், ஒன்லைனில் வினோத சவாலை ஏற்றுக் கொண்டு சிறுவன் இதனை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனினும், பொலிஸார் முழு பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |