ஸ்பெயின் பள்ளியில் 14 வயது சிறுவனின் வெறிச்செயல்: 3 ஆசிரியர்கள், 2 மாணவர்களுக்கு கத்திக்குத்து
ஸ்பெயினில் உள்ள பள்ளியில் 14 வயது மாணவன் ஒருவர் கத்தியால் ஆசிரியர்களையும், மாணவர்களையும் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் கத்திக்குத்து
ஸ்பெயின் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவர் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் வகுப்புகள் தொடங்கிய பிறகு பையில் இருந்த 2 கத்தியை வெளியே எடுத்த சிறுவன், பாடம் எடுத்துக் கொண்டு இருந்த ஆசிரியரின் கண்களில் விரட்டிச் சென்று கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளான்.
இதனை தடுக்க வந்த ஆசிரியர்களையும் சிறுவன் கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார். மேலும் மாணவர்களையும் கத்தியால் குத்தி, அடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்,
14 வயது மாணவரின் இந்த கத்திக்குத்து தாக்குதலில் மொத்தம் 3 ஆசிரியர்கள் மற்றும் 2 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Europa Press/ABACA/picture alliance
ADVERTISEMENT
இதையடுத்து பள்ளி வளாகத்தில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் சிறுவனின் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |