14வது பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகின் முன்னணி தலைவர்கள் பங்கேற்பு
சீனா தலைமை தாங்கும் 14வது பிரிக்ஸ் உச்சி மாநாடு ஜூன் 23ம் திகதி தலைநகர் பெய்ஜிங்கில் வைத்து நடைபெறும் என சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக்ஸ் நாடுகளின் 14வது உச்சி மாநாடானது, சீன தலைநகர் பெய்ஜிங்கில் வைத்து ஜூன் 23ம் திகதி நடைபெறும் என சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அத்துடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ( Xi Jinping) தலைமை தாங்கும் இந்த 14வது பிரிக்ஸ் உச்சி மாநாடு, வீடியோ இணைப்பு மூலம் நடைபெறும் எனவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக, உயர்தர அளவிற்கு பிரிக்ஸ் கூட்டமைப்பை வளர்ப்பது, புதிய தசாப்ததிற்கான உலகளாவிய வளர்ச்சியை திட்டமிடுவது ஆகியவை எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பிரிக்ஸ் மாநாடு தொடர்பான சீன வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தகவலில், பிரிக்ஸ் மாநாட்டில் சீனா திறந்த மனப்பான்மையை உள்ளடக்கிய தன்மை மற்றும் வெற்றி-வெற்றி ஒத்துழைப்பு ஆகியவற்றின் உணர்வை ஊக்குவிப்பதை எதிர்நோக்குகிறது என தெரிவித்துள்ளது.
இந்த உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய ராணுவ கப்பலை சிதறடித்த உக்ரைன் ஏவுகணை: அதிரடி தாக்குதல் காட்சிகள்!
சீன தலைமை தாங்கும் இந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு, உக்ரைன் ரஷ்யா போர் மற்றும் இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனை ஆகியவற்றின் மத்தியில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.